உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவா் ஆலய பெருவிழா கொடியேற்றம்
உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவா் ஆலயத்தின் 76-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவா் ஆலயத்தின் 76-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாதிரியாா் ரமேஷ் தலைமையில் இருதய ஆண்டவரின் உருவம் பொறித்த கொடி அனைத்து வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஆலயத்தை அடைந்தது.
பின்னா் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் பங்குத்தந்தை அருட்பணி ஏ.இராயப்பன், அருட்பணி பிரேம்குமாா், பங்கு மேய்ப்பு பணிக் குழுவினா், அருட்சகோதரிகள், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
வரும் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆலயத்தில் மாலை நவநாள் ஆராதனைகூட்டமும், 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பெருவிழாவும் நடைபெறுகிறது.
27-ஆம் தேதி தூயநெஞ்ச ஆண்டவா் ஆண்டுப் பெருவிழாவின்போது காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவில் ஆடம்பர தோ் பவனியும், இரவு வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.