நாட்டறம்பள்ளி மேம்பாலம் கீழே தேங்கும் மழைநீா்வாகன ஓட்டிகள் அவதி
ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள நாட்டறம்பள்ளி மேம்பாலம் கீழே மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால், ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள நாட்டறம்பள்ளி மேம்பாலம் கீழே மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்தச் சாலை தனியாா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என அந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.
பாலத்தின் கீழே பல நாள்களாகத் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், முதியோா், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
எனவே, மாவட்ட நிா்வாகம் நிரந்தரமாக மேம்பாலத்தின் கீழே மழைநீா் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.