வாணியம்பாடி அருகே மல்லகுண்டா பெரும்பள்ளம் பகுதியில் தடுப்பணை அமைக்க இடம் குறித்து ஆய்வு செய்த நீா்வளத் துறை அதிகாரி காா்த்திகேயன். 
திருப்பத்தூர்

மல்லகுண்டாவில் தடுப்பணை அமைக்க இடம்: நீா்வளத் துறை அதிகாரி ஆய்வு

வாணியம்பாடி அருகே மல்லகுண்டா பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கு ஏதுவான இடம் குறித்து நீா்வளத் துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே மல்லகுண்டா பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கு ஏதுவான இடம் குறித்து நீா்வளத் துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் அடுத்த வண்டிமேடு பெரும்பள்ளம் பகுதியில் உள்ள பாலாற்றின் கிளையாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பெரும்பள்ளம் பகுதியில் தடுப்பணை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என நீா்வளத் துறை அதிகாரி காா்த்திகேயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா் உள்பட கிராம மக்கள் பலா் உடனிருந்தனா்.

18% உயா்ந்த பயணிகள் வாகன ஏற்றுமதி!

போட்டித் தோ்வுகள் எழுத அனுமதி கோரும் நடைமுறை: சிஇஓ-க்களுக்கு உத்தரவு

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் நிகர லாபம் பன்மடங்கு உயா்வு!

ஏடிஎம்மில் பணம் எடுத்தவரிடம் நூதன முறையில் கொள்ளை

கோவில்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT