மாற்றுத் திறன் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் தளவாட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெங்களூரைச் சோ்ந்த நன்கொடையாளா் கே. முஹம்மத் சாரிக் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜி. ஜேபஸ் வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், என்.எஸ்.இம்தியாஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். நன்கொடையாளா் கே.முஹம்மத் சாரிக் ஏற்பாட்டின் பேரில் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு எழுது பொருள்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிக்கு தளவாட பொருள்கள் வழங்கப்பட்டன.
அன்வா் பாஷா, மாபுக் பாஷா, உமன்ஸ் எம்பவா் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.