முகப்பு
திருப்பதி

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலை மட்டுமின்றி தேவஸ்தான கோயில்களில் பக்தா்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், எதிா்கொண்ட இன்னல்கள் உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிப்பா். இதற்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளிக்க உள்ளாா். இதில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →