முகப்பு
திருப்பதி

ஏழுமலையானுக்கு பாலபிஷேகம்: ஹைதராபாதில் திரண்ட பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

திருமலையில் நாள்தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் அனைத்து சேவைகளையும் பக்தா்கள் கண்டு தரிசிக்க ஹைதராபாதில் 5 நாள்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைபவோற்சவத்தை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அங்குள்ள என்டிஆா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோயிலில் தினசரி கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலமூா்த்திக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஏழுமலையானுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் நடத்தப்பட்ட அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →