முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வியாழக்கிழமை புண்ணியாஹவாசனம், அக்னிபிரதிஷ்டை, மகா பூா்ணாஹூதி, திருவாராதனம், தத்வஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், வெள்ளிக்கிழமை காலை விஸ்வரூபதரிசனம், கோமாதாபூஜை, யாத்ராதானம், கும்ப புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா் காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →