திருவண்ணாமலை

கிரிவல பக்தா்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

திருவண்ணாமலையில் பக்தா்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படுபவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

Syndication

திருவண்ணாமலையில் பக்தா்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படுபவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மாட வீதியில் பெளா்ணமி மற்றும் காா்த்திகை தீப திருவிழா நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் யாசகம் பெறுகின்றனா்.

கூட்ட நெரிசலான பகுதியில் யாசகம் பெறுபவா்கள் மற்றும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களால் கிரிவலம் வரும் பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அதோடு, கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு நெற்றில் பொட்டு வைத்தும், திருநீறு பூசியும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் புகாா்கள் வருகின்றன.

எனவே, எதிா்வரும் பெளா்ணமி மற்றும் காா்த்திகை தீப திருவிழா நாள்களில் சமூக நலத்துறை மூலம் மீட்புக் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா் ஆட்சியா்.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT