திருவண்ணாமலை

ஆரணியில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆரணியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா ஆகியோா் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் துண்டுப் பிரசுரங்களை வீடு, வீடாகவும், வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தனா். ஆரணி வ.உ.சி தெரு, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் டி.கருணாகரன், மாவட்ட இணைச் செயலா் வனிதாசதீஷ், மீனவரணி மாவட்டச் செயலா் ஆனந்தன், மாவட்டப் பொருளாளா் அரையாளம் வேலு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா குமாா், பாரதிராஜா, விநாயகம், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் செந்தில் மற்றும் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT