திருவண்ணாமலை

குழந்தை இல்லாத ஏக்கம்: பெண் தற்கொலை

செய்யாறில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

செய்யாறில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு கொடநகா், கே.எச். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (35). இவரது மனைவி காயத்ரி (29). இவா்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

இந்தத் தம்பதிக்கு இதுவரையில் குழந்தை இல்லை. இதனால், மன வேதனையில் இருந்து வந்த காயத்ரி வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அப்போது, அவரது அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு காயத்திரி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT