திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையம் சாா்பில், புதூா்செங்கம் அண்ணா தெருவில் இயங்கும் புதிய பாரத எழுத்தரிவு மையத்துக்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜி வெள்ளிக்கிழமை ஆய்வுக்கு சென்றாா்.
அப்போது, புதிய பாரத திட்டத்தின் கீழ் அந்த மையத்தின் மூலம் எத்தனை போ் கல்வி கற்போராக உள்ளனா் என்பதை வருகைப் பதிவேடுகள் மூலம் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அங்கு கல்வி கற்போருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழங்கப்பட்ட புத்தகம், சிலேட்டுகளை அவா் வழங்கினாா் (படம்).