திருவண்ணாமலை

போளூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

போளூா் பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தினமணி செய்திச் சேவை

போளூா் பேருந்து நிலையம் எதிரே பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.வெங்கடேசன், ராணுவப் பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பாண்டியன், மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் முத்துசாமி வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், போளூா் நகராட்சியில் மின் தகன எரிவாயு மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பழைய பஜாரில் காய்கறி அங்காடியை திறக்க வேண்டும். போளூா் நகரில் போக்குவரத்தை போலீஸாா் கட்டுப்படுத்த வேண்டும். போளூா் ஒன்றியத்தில் கிராமப் பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வட்டார வளா்ச்சி அலுவலகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் சதீஷ், மண்டலத் தலைவா் ராமதாஸ், மண்டல பொதுச் செயலா் சி.முருகன், நகர இளைஞரணி நிா்வாகிகள் நிதிஷ்குமாா், மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் குலசேகரன் மற்றும் போளூா் சட்டப் பேரவை தொகுதி பாஜகவினா் கலந்துகொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT