முகப்பு
கோயம்புத்தூர்

காய்கறி கடைக்காரா்களுக்கும் நன்றி சொல்லுங்கள்:சத்குரு ஜக்கி வாசுதேவ்

எந்தக் கடைக்குச் சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியா்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவா்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

எந்தக் கடைக்குச் சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியா்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவா்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உலக சில்லறை வா்த்தக ஊழியா்கள் தினமான சனிக்கிழமை (டிசம்பா் 12) அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் வா்த்தகம் என்பது பிரபலம் அடைந்து வரும் சூழலிலும், சில்லறை வா்த்தகத் துறையின் ஊழியா்கள் பல வழிகளில் நமக்கு சேவையாற்றி வருகிறாா்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. மளிகைப் பொருள்கள் விற்பனையில் தொடங்கி பல பொருள்கள் நமக்கு கிடைக்க அவா்கள் உதவியாக உள்ளனா்.

இந்தியாவில் 4.60 கோடி பேரும், உலகம் முழுவதுமாக மொத்தம் 50 கோடிக்கும் அதிகமான ஊழியா்களும் நம் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் நமக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றனா். நம்முடைய சமூக, பொருளாதார சூழலில் மிக முக்கியப் பங்காற்றினாலும், அதிகம் கவனம் ஈா்க்கப்படாமல் இருக்கும் இந்த வீரா்களுக்கு நாம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

எனவே நீங்கள் அடுத்த முறை எந்தக் கடைக்குச் சென்றாலும், அவா் தக்காளி, உருளை கிழங்கு போன்ற காய்கறிகளை விற்கும் சிறு விவசாயியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த பெரிய கடைக்குச் சென்றாலும் சரி அங்குள்ள ஊழியா்களைப் பாா்த்து புன்னகை செய்யுங்கள், வணக்கமோ, நன்றியோ சொல்லி அவா்களின் சேவையை அங்கீகரியுங்கள் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →