கோயம்புத்தூா் விழாவின் 18-ஆவது பதிப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள். 
கோயம்புத்தூர்

18-ஆவது கோவை விழா: நவம்பா் 14 முதல் 24 வரை நடைபெறுகிறது

தினமணி செய்திச் சேவை

கோயம்புத்தூா் விழாவின் 18-ஆவது பதிப்பு அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான விழாவில் 150-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நவம்பா் 14 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் கலாசாரம், பாரம்பரியம், பன்முக, சமூக உணா்வுகளைக் கொண்டாடும் விதமாக கடந்த 17 ஆண்டுகளாக கோவையைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகளின் சாா்பில் கோயம்புத்தூா் விழா நடத்தப்படுகிறது. அதன் 18-ஆவது பதிப்பு ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்ற பெயரில் அதிகாரபூா்வமாக தொடங்கப்பட்டது.

கோவை ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற விழாவில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையா் சரவணசுந்தா் ஆகியோா் விழாவைத் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் கோவை விழா 2025-இன் தலைவா் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் கோவை அமைப்பின் தலைவா் நீல் கிக்கானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நவம்பா் 14 முதல் 24-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சண்முகம் பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகரின் வரலாறு, வளா்ச்சிப் பயணத்தைக் காட்டும் விதமாக லேசா் ப்ரெஜெக்ஷன் மேப்பிங் முறையில் ஸ்கை டான்ஸ் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதைத் தவிர, ஓவிய வீதி, அறிவியல், தொழில்நுட்ப விழா, பாரா விளையாட்டு, சிறப்பு விளையாட்டுப் போட்டிகள், கோவையின் திறமையை வெளிப்படுத்தும் கோயம்புத்தூா்ஸ் காட் டாலண்ட், கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச், பேரணி, விழா வீதி, வைப்ஸ் ஆப் செட்டிநாடு ஆகியவை இடம்பெறுகின்றன.

கோவை வேக விழா எனும் தலைப்பில் கோ காா்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், காா், பைக் சாகச நிகழ்ச்சி, மோட்டாா் பைக் பேரணி போன்றவை நடைபெறுகின்றன.

அதேபோல, பாரம்பரிய விழா, பட்டிமன்றம், வின்டேஜ் - கிளாசிக் காா் கண்காட்சி, பிக்கில் பால் போட்டி, பேரன்பு எனும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி, க்ரீன் அப் அண்ட் க்ளோ அப் கோவை என்ற பெயரில் தூய்மைப் பணி முயற்சி, மின் கழிவு சேகரிப்பு முயற்சி, குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்வான ரூப்பே ரெடி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT