முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோவையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்.
பகிர்:

கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஊழியர்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசு மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். 

அனைத்து துறைகளுக்கும் ஆதாரமாக  விளங்கும் மின்சார துறையை மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தனியார் மயமாக்கி நாட்டின் ஆதாரத்தை சீர் குலைக்க முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். 

மின்வாரியத்திலுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை ஐடிஐ படித்த மாணவர்களை கொண்டு நிரப்பவும், ஒப்பந்த தொழிலாளர்களான கேங்மேன்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →