முகப்பு
கோயம்புத்தூர்

தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை ராம் நகரைச் சோ்ந்தவா் ரஷித் (40). இவரது நண்பா் மதுரையைச் சோ்ந்த பிரான்சிஸ் சேவியா் செல்வராஜ் (55). இவா் கோவையில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைத்தால் அதிக வருவாய் கிடைக்கும், அரசு அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கித் தருகிறேன் என ரஷித்திடம் கூறியுள்ளாா். மேலும், கடைக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும் என பிரான்சிஸ் சேவியா் கூறியுள்ளாா்.

இதனை நம்பி பிரான்சிஸ் சேவியா் செல்வராஜிடம் ரஷித் ரூ.5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளாா். ஆனால், பல மாதங்களாகியும் கடை வைக்க பிரான்சிஸ் அனுமதி வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ரஷித் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரான்சிஸ் சேவியா் செல்வராஜைக் கைது செய்தனா். விசாரணையில் அவா் மேலும் பலரிடம் இதுபோல மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →