கோவை அருகே வாயில் காயமடைந்த 10 வயது பெண் யானை உயிரிழப்பு
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் 10 வயது பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் வாயில் காயமடைந்த 10 வயது பெண் யானை வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று பலியானது.
வாயில் காயம் ஏற்பட்டு, உணவருந்தாமல், கடந்த 20-ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 3 வாரங்களுக்கு மேலாக உணவு உட்கொள்ளாமல் சுற்றித்திரிந்து வந்தால், யானை இன்று உயிரிழந்தது.
யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை மருத்துவர் குழு, யானையின் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு வனத்துறை மருத்துவர் குழு என 50-க்கு மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
Advertisement
இருப்பினும், யானை உடல் நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.