அந்தியூரில் ரூ. 15.08 லட்சத்துக்குவிளைபொருள்கள் ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 15.08 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 15.08 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு வந்த 5,320 தேங்காய்களில் சிறியவை ரூ. 9.11 முதல் ரூ. 27.51 வரையில் என ரூ. 68,976க்கும், 8 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 105.69 முதல் ரூ. 117.09 வரையில் என ரூ. 18,416க்கும், 65 மூட்டைகள் எள் கிலோ ரூ. 85.19 முதல் ரூ. 98.29 வரையில் என ரூ. 3,73,190க்கும், 1,137 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 15.18 என ரூ. 10,47,825க்கும் ஏலம் போனது. மொத்தம் 1210 மூட்டைகள் 993.02 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 15,08,407க்கு விற்பனையானது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்தாா்.