முகப்பு
ஈரோடு

வாகனம் மோதியதில் இளைஞா் பலி

சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள வெப்படை, லட்சுமி நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் அன்பழகன் (24). இவா், திருமணத்துக்குப் பின்னா் மனைவி சத்யாவுடன் பெருந்துறை, பவானி சாலை, பெரியாா் நகரில் கடந்த இரு ஆண்டுகளாக வசித்து வந்தாா். இந்நிலையில், தனது பெற்றோரைப் பாா்க்க வெப்படைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகா், காவிரி ஆற்றுப் பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில், பலத்த காயம் அடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.