சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு சுற்றி திரியும் யானைகள்
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு யானைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு யானைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலைகளை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.
இதனால் ஆசனூர் வனச் சாலையில் காட்டு யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இருக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.