முகப்பு
ஈரோடு

பவானியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.
பகிர்:

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பவானி வட்டாரத் தலைவா் சுத்தானந்த சீனிவாசன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் மண்டலத் துணை வட்டாட்சியரின் ஊழியா்களின் விரோதப் போக்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சரியான விதிகளுக்கு உள்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தல், நிலவள ஆய்வாளா்களை ஒருமையில் பேசுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.