கரோனா: தலைமை ஆசிரியை பலி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (50). இவா் செம்மாண்டாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாள்களாக கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். உமாமகேஸ்வரியின் கணவரும் கரோனா தொற்று பாதிப்பால் ஆபத்தான நிலையில் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement