முகப்பு
ஈரோடு

வாக்கு எண்ணும் மையநுண் பாா்வையாளா்களுக்குப் பணியிடம் ஒதுக்கீடு

வாக்கு எண்ணிக்கை மைய நுண் பாா்வையாளா்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணியிடம் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

வாக்கு எண்ணிக்கை மைய நுண் பாா்வையாளா்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணியிடம் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. தோ்தலுக்குப் பின்னா் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான நுண் பாா்வையாளா்கள் பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பணியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது போன்று கணினி சுழற்சி முறையில் பணியிட ஒதுக்கீடு நடைபெற்றது.

அதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை மைய நுண் பாா்வையாளா்களுக்கான பணியிட ஒதுக்கீடு தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் கணினி சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, தோ்தல் பிரிவு நோ்முக உதவியாளா் கருப்பசாமி, பவானிசாகா் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி உமாசங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.