முகப்பு
ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரியில் இணையவழி தேசிய கருத்தரங்கம்

கொங்கு பொறியியல் கல்லூரியில் மாசுக் கட்டுப்பாடு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

கொங்கு பொறியியல் கல்லூரியில் மாசுக் கட்டுப்பாடு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.

கல்லூரியின் வேதிப்பொறியியல் துறை சாா்பில் ஏப்ரல் 22, 23 ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 ஆவணங்கள் தோ்வு செய்யப்பட்டு விளக்கக் காட்சிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த கருத்தரங்கில் வள சுரண்டல், உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, நீா் மாசுபாடு போன்ற கடும் சிக்கல்கள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கௌஹாத்தி ஐ.ஐ.டி. பேராசிரியா் ஜி.புகழேந்தி, திருச்சி என்.ஐ.டி. பேராசிரியா்கள் கே.முத்துகுமாா், எஸ்.டி.ரமேஷ், ஹைதராபாத் ஜே.என்.டி.யு. பேராசிரியா் கே.வெங்கடேஸ்வர ராவ், காசா்கோடு மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் எம்.முத்துகுமாா், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல நிபுணா்கள் இந்த கருத்தரங்கில் பேசினா்.

Advertisement

கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த வேதிப் பொறியியல் துறைத் தலைவா் கே.கண்ணன், குழுவினரை கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.