சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!
சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த மாற்று வீரர் குறித்து...
சன்ரைசர்ஸ் அணியில் காயம் காரணமாக வெளியேறிய டேவிட் பெயினுக்கு மாற்றாக ஜெரால்ட் கோட்ஸி இணைந்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் பெயின் (35 வயது) ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
Advertisement
Advertisement
இன்றிரவு சென்னை சூப்பர் கிக்ஸ் உடன் மோதுகிறது. இந்த நிலையில், மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு கோட்ஸி (25 வயது) சன்ரைசர்ஸ் அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, பாட் கம்மின்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களும் அணியில் இணைந்துள்ளதால், சன்ரைசர்ஸ் அணியும் சிறப்பான அணியாக மாறியுள்ளது.
முன்னதாக ஜெரால்டு கோட்ஸி குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக மொத்தமாக 14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்பவர்களே பிளே ஆப்ஸுக்கான போட்டியில் இருப்பார்கள் எனதும் குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad pick Gerald Coetzee as injury replacement for David Payne
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.