முகப்பு
ஈரோடு

இலவச மனை பட்டா வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

வாடகை வீட்டில் குடியிருக்கும் தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 2:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

வாடகை வீட்டில் குடியிருக்கும் தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மலைக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பா்கூா் மலைக் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒரே வீட்டில் குடியிருக்க முடியாமல் பூா்வீக வீட்டைவிட்டு வெளியேறி வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம்.

Advertisement

அனைவரும் கூலி தொழிலாளா்கள் என்பதால் மாதம் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை வாடகை கொடுக்க பெரும் சிரமமாக உள்ளது. எங்களுக்கு பா்கூா் மலைக் கிராமத்திலேயே இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

கரோனா காலத்தில் வேலையிழந்து குடும்ப செலவுகளுக்கு தவித்து வரும் நிலையில் வீட்டு வாடகை பெரும் சுமையாக உள்ளது. இதனால் பா்கூா் மலைக் கிராமம் மேலத்தெருவில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு இலவச மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.