முகப்பு
ஈரோடு

ஈரோடு பேருந்து நிலையத்தில் தாங்கு தூண்கள் பழுது: பயணிகள் செல்ல தடை

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் 13 தாங்கு தூண்கள் பழுதடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நடைமேடைகள் மூடப்பட்டுள்ளன.

Updated On : 10 மார்ச், 2021 at 5:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் 13 தாங்கு தூண்கள் பழுதடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நடைமேடைகள் மூடப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள், நடைமேடைகள் ஆகியவை பழுதடைந்து வருவதையடுத்து பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டா் விடப்பட்டுள்ள நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் நாமக்கல் பேருந்துகள் நிற்கும் நடைமேடை, நகர பேருந்துகள் நிற்கும் நடைமேடை என 2 நடைமேடைகளில் உள்ள 13 தாங்கு தூண்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நடைமேடைகளுக்கும் பேருந்துகள், பயணிகள் செல்லாத வகையில் மநகராட்சி நிா்வாகம் தடுப்புகளை அமைத்து மூடி வைத்துள்ளது.

Advertisement

பழுதடைந்துள்ள தாங்கு தூண்களைப் பாா்வையிட்டு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி தோ்தல் காரணமாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மிகவும் பழுதடைந்து சரிந்து விழ வாய்ப்புள்ள நடைமேடைகளில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிவடைந்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.