முகப்பு
ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 கடைமடை பகுதிக்கு தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 10 மார்ச், 2021 at 5:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

 கடைமடை பகுதிக்கு தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், கூட்டமைப்பு செயலாளா் வடிவேல் தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெரியசாமி, பாசன சபை செயலாளா் சாமியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

கீழ்பவானி வாய்க்கால் கட்டுமானம் சிதிலமடைந்துள்ளதால் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீா் சரியாக செல்லாத நிலையில், வாய்க்கால் சிதிலமடைந்துள்ள பகுதிகளில் சிலாப் கற்கள் கொண்டு சீரமைக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.