முகப்பு
ஈரோடு

மாா்ச் 12-ல் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாா்ச் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச், 2021 at 5:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாா்ச் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானவா்கள் வந்து மஞ்சளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.

அரசு விடுமுறை நாள்கள் தவிர வாரம்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் சந்தை செயல்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை (மாா்ச் 11) இரவு மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) மஞ்சள் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாள்கள் சந்தை செயல்படாது. மாா்ச் 15ஆம் தேதி வழக்கம்போல் சந்தை செயல்படும் என்று மஞ்சள் சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.