முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் அதிமுக, தமாகா வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோா் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

Updated On : 16 மார்ச், 2021 at 2:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோா் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் கடந்த 12ஆம் தேதி முதல் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியா் சி.சைபுதினிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு உடனிருந்தாா்.

கே.வி.இராமலிங்கம் இப்போது மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். கடந்த 2011, 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றாா்.

Advertisement

ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளா் எம்.யுவராஜா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இந்த நிகழ்வில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உடனிருந்தாா்.

முன்னதாக ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் பணிமனை ஈரோடு - பெருந்துறை சாலை நசியனூா் சாலை பிரிவு அருகிலும், ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் பணிமனை ஈரோடு அரசு மருத்துவமனை அருகிலும் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா, மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் சி.கே.சரஸ்வதி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, அதிமுக, தமாகா, பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.