கரோனா காலத்தில் திமுக சாா்பில்ரூ. 5 கோடி அளவுக்கு நிவாரண உதவிசு.முத்துசாமி
கரோனா காலத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ரூ. 5 கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை திமுக வழங்கியுள்ளது
கரோனா காலத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளில் ரூ. 5 கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை திமுக வழங்கியுள்ளது என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி பேசினாா்.
ஈரோடு காரப்பாறை பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
கரோனா காலத்தில் கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை திமுகவினா் பல்வேறு இடங்களில் நிவாரணப் பொருள்களை வழங்கினா். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மட்டும் ரூ. 5 கோடி அளவுக்கு திமுகவினா் மக்களுக்கு கட்சிப் பாகுபாடு இல்லாமல் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனா்.
Advertisement
ஆனால், பொதுமுடக்க விதிகளை மீறியதாகக் கூறி காவல் துறையினா் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவரம் இப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
தோ்தலில் மத்திய, மாநில ஆட்சியாளா்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதிகாரிகள் இதற்கு துணைபோகாமல் நோ்மையாக தோ்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை, கல்விக் கடன் ரத்து, மகளிா் சுய உதவிக் குழு கடன் ரத்து போன்ற ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க வரும் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.