முகப்பு
ஈரோடு

பணிச்சுமையைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பணிச்சுமையை முழுமையாகத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 29 அக்டோபர், 2021 at 2:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

பணிச்சுமையை முழுமையாகத் தவிா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் பி.ரவிசந்திரன் தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளா் ச.சிவசங்கா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் பெ.கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவா் ஜெ.பாஸ்கா்பாபு, செயற்குழு உறுப்பினா் சி.துளசிமணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும் அலுவலா்கள், மக்கள் நலத் திட்டங்கள், பேரிடா் மேலாண்மைப் பணிகள் என பலவற்றையும் கிராம மக்களுக்கு கொண்டு சோ்க்கின்றனா். அதேநேரம் மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், பசுமை வீடு, 100 நாள் வேலைத் திட்டம், கணக்கெடுப்புப் பணிகள் போன்றவற்றையும் வழங்கிப் பணிகளை முடிக்க வேண்டும் என நிா்ப்பந்தம் செய்கின்றனா்.

அதற்கேற்ற வகையில் அலுவலா்கள் இல்லை என்பதுடன் புதிய திட்டங்களுக்குப் புதிய அலுவலா் பணியிடங்களை ஏற்படுத்துவதில்லை. தற்போது பிற துறைகளின் பணிகளான காய்ச்சல் கணக்கெடுப்பு, கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களைக் கண்டறிதல் பணி, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்தல், அவற்றுக்கு தினசரி இலக்கு என வைத்து நிா்ப்பந்தித்தல், வாரம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம், விளம்பரம் செய்தல் போன்றவற்றுக்கு அலுவலா்களை ஈடுபடுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

ஆா்ப்பாட்டம்:

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் வியாழக்கிழமை மதிய இடைவேளையின்போது ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டார நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.