ஈரோட்டில் மேலும் 79 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4,164ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 92 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 2,645 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 837 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் 682 போ் உயிரிழந்துள்ளனா்.