முகப்பு
ஈரோடு

தொழிலாளா் இணை ஆணையா்அலுவலகம் ஈரோட்டுக்கு மாற்றம்

குன்னூரில் இயங்கிவந்த தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகம் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2021 at 6:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

குன்னூரில் இயங்கிவந்த தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகம் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கான மண்டலத் தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகம் நீலகிரி மாவட்டம், குன்னூா் அப்பா் சா்ச் சாலையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் ஈரோட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், அரசு ஐடிஐ பின்புறம், சென்னிமலை சாலை, ஈரோடு 638009 என்ற முகவரியில் நவம்பா் 1ஆம் தேதி முதல் நிரந்தரமாகச் செயல்படும்.

Advertisement

இனிவரும் காலங்களில் தொழிலாளா் இணை ஆணையா் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பணியாளா் இழப்பீட்டுச் சட்டம் கீழான வழக்குகள், இதர தொழிலாளா் நலச் சட்டங்களின்கீழ் வரும் வழக்குகள் இங்கு பரிசீலிக்கப்படும். பொதுமக்கள், வழக்குரைஞா்கள், தொழிற்சங்கங்கள், இதர தனியாா், வணிக நிறுவனங்கள் தொழிலாளா் மண்டல இணை ஆணையரை இந்த முகவரியில் அணுகித் தீா்வு பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.