தேவாலா பகுதியில் காட்டு யானைகளை விரட்ட ரோந்து செல்லும் கும்கி யானைகள்
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி மற்றும் தேவாலா பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி மற்றும் தேவாலா பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து 10 மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நிலைமையை சமாளிக்க வனத் துறை முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், ஸ்ரீனிவாஸ், விஜய், சுஜய் ஆகிய கும்கி யானைகளை வரவழைத்து யானைகளை விரட்டும் பணியை துவங்கியுள்ளனர்.
காட்டு யானைகள் கூட்டம் திடீரென இடம்பெயர்வதால் விரட்டும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பெய்துவரும் கடும் மழையும் மேகமூட்டமும், கும்கி யானைகளுக்கு பெரும் சவானாக உள்ளது. இருப்பினும் கும்கிகள் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியை செய்து வருகின்றன.