முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 138 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 நீலகிரி மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 345 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை 27,726 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 26,604 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 155 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 967 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.