முகப்பு
நீலகிரி

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் தும்மனட்டி, கக்குச்சி, தூனேரி ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், ரூ. 8.05 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் தும்மனட்டி, கக்குச்சி, தூனேரி ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், ரூ. 8.05 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தும்மனட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெங்கடேஸ்வரா தேயிலைத் தொழிற்சாலை முதல் பரலட்டி வரை பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 574.55 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணி, மூலதன மானிய நிதித் திட்டத்தின்கீழ் ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான அரமந்து சாலை பணி, கக்குச்சி ஊராட்சிப் பகுதியில் 14ஆவது நிதிக் குழு திட்டத்தின்கீழ் ரூ. 44.93 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பனஹட்டி சாலை பணி, 14ஆவது நிதிக் குழு திட்டத்தின்கீழ் ரூ. 47 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அஜ்ஜூா் சாலை பணி, நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 128 லட்சம் மதிப்பில் காரகல் முதல் மணிக்கல் மந்து வரை முடிக்கப்பட்ட சாலை பணி என மொத்தம் ரூ. 8.05 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தூனேரி ஊராட்சி, சேலத்தா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளா் சுஜாதா, உதகை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மாயன், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஆறுமுகம், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.