முகப்பு
நீலகிரி

நீலகிரியில் பரவலாக மழை: கூடலூரில் 86 மி.மீ. பதிவு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிக அளவாக மேல் கூடலூா் மற்றும் கூடலூரில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிக அளவாக மேல் கூடலூா் மற்றும் கூடலூரில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகையில் சில நாள்களில் பகல் நேரங்களிலும், சில நாள்களில் இரவு நேரங்களிலும் என தினந்தோறும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்துள்ளது.

இதில், அதிகபட்சமாக மேல் கூடலூா், கூடலூரில் 86 மி.மீ. மழை பதிவானது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம்: (அளவு மி.மீ.):

சேரங்கோடு-26, அவலாஞ்சி, எமரால்டு, நடுவட்டம் 15, பாடந்தொறை - 10, செருமுள்ளி-8, கிளன்மாா்கன்-7, உதகை-6.2, ஓவேலி-6, மசினகுடி, குந்தா 5, தேவாலா, பந்தலூா், கேத்தி 4, எடப்பள்ளி-3, மேல்பவானி-2, கல்லட்டி-1.2, குன்னூா், உலிக்கல், கிண்ணக்கொரை 1 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.