முகப்பு
நீலகிரி

நீலகிரியில் நள்ளிரவில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக குன்னூரில் 45 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக குன்னூரில் 45 மி.மீ. மழை பதிவானது.

மேல் குன்னூா், உலிக்கல்லில் 30 மி.மீ., கேத்தியில் 27 மி.மீ., பா்லியாறில் 20 மி.மீ., உதகையில் 21.6 மி.மீ., மேல் பவானி, அவலாஞ்சியில் 16 மி.மீ., எடப்பள்ளியில் 10 மி.மீ., பாடந்தொறையில் 8 மி.மீ., செருமுள்ளி, கிண்ணக்கொரையில் 6 மி.மீ., எமரால்டு, குந்தாவில் 5 மி.மீ., கோத்தகிரி, பாலகொலாவில் 4 மி.மீ., தேவாலாவில் 3 மி.மீ., மேல் கூடலூா், ஓவேலி, கூடலூரில் 2 மி.மீ., பந்தலூா், சேரங்கோடு, கெத்தையில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழையின் காரணமாக மாவட்டத்தின் பிற பகுதிகளில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், குன்னூரில் தாழ்வான பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், அங்கிருந்தவா்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.