ரூ.14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்தது.
வெள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்தது.
இங்குள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வார ஏலத்துக்கு 14 ஆயிரத்து 994 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. கடந்த வாரத்தை விட 100 மூட்டைகள் அதிகமாகும். இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 119.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 74.45-க்கும் ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.100.15.
மொத்தம் ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 896-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தெரிவித்தார்.