முகப்பு
திருப்பூர்

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
பகிர்:

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவானது வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,343 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், சம்மந்தப்பட்ட தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் இருந்து தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

அதே போல், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு குமரன் மகளிர் கல்லூரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

அதே போல, தாராபுரம் தொகுதிக்கு சார் ஆட்சியர் அலுவகம், காங்கயம் தொகுதிக்கு ஆதிதிராவிடர் நல அலுவலகம், அவிநாசி தொகுதிக்கு மஹாராணி பொறியியல் கல்லூரி, பல்லடம் தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், உடுமலை தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மடத்துக்குளம் தொகுதிக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும்  வாக்காளர் படிவம், பேலட் பேப்பர், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட 36 வகையான பொருள்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் அனுப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →