திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மேள, தாளத்துடன் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்
திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நூதன முறையில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நூதன முறையில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் மாநில அமைப்பாளர் கே.எம்.கணேசன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் மேள, தாளங்ளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிக்கலாமே | எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். கரோனா காலத்தில் வாழ்வாதரத்தை இழந்த 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆகவே, எங்களது வாழ்வாதரத்தைக் பாதுகாக்கும் வகையில் திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
60 வயது முதிர்ந்த முதிர்ந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு மாவட்டந்தோறும் தலா 50 கலைஞர்களுக்கு இலவசமாக இசைக்கருவிகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.