திருப்பூர்

திருப்பூரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்; வெறிச்சோடிய மாநகரம்

DIN

தமிழகத்தில் கரோனா பரவலின் 3 ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. திருப்பூர் சிடிசி கார்னர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். அதே வேளையில், பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், பத்திரிகை விநியோகம் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் மகளிர் கல்லூரி, அம்மாபாளையம்,காசிபாளையம், கோவில்வழி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகனச்சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்: 

பிகார், ஒடிஸா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலமாக திருப்பூர் வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைக்குப் பின்னர் வெளியில் அனுமதிக்கப்படுகின்றனர். 

அவ்வாறு வரும் பயணிகள் சனிக்கிழமை இரவு முதல் பேருந்து வசதிகள் இல்லாததால் ரயில் நிலையத்தின் முன்புறம் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அதே போல, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளும் ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைக்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT