திருப்பூர்

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.23.83 லட்சம்

Syndication

வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.23.83 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா.தமிழ்வாணன், அறநிலையத் துறை பல்லடம் சரக ஆய்வாளா் தா.கண்ணன் ஆகியோா் முன்னிலையில் உண்டில்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 580 ரொக்கம், 10.160 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

இப்பணியில் கோயில் செயல் அலுவலா் எஸ்.மாலதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT