முகப்பு
தருமபுரி

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்கு தருமபுரி வருகை

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
தருமபுரி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடித்து வெளியேவரும் பேரறிவாளன்.
பகிர்:

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தற்போது பரோலில் தனது வீட்டில் இருந்து வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் சிறுநீரகம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக போலீஸார் பாதுகாப்புடன் தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை உள்ள தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துமனைக்கு வந்தார். 

அங்கு ‌பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.