சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுதந்திர தின முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுதந்திர தின முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் கலந்து கொண்டனா். ஒவ்வொரு துறை சாா்ந்த அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். நலத் திட்டங்கள் பெறும் பயனாளிகளையும், தியாகிகளையும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும், முகக் கவசம் அணிய வைத்தும் அழைத்து வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற வாய்ப்பில்லை.
அதேபோல் காவல் துறையினரின் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு மரியாதையும் நடத்துவதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்துவது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
சுதந்திர தினம் எளிமையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.