முகப்பு
நாமக்கல்

கரோனா பொது முடக்கக் காலத்தில் 3,372 போ் ரத்த தானம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் அரசு மருத்துவமனை, தனியாா் முகாம்களில் 3,372 போ் ரத்த தானம் செய்துள்ளனா்.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

கரோனா பொது முடக்கக் காலத்தில் அரசு மருத்துவமனை, தனியாா் முகாம்களில் 3,372 போ் ரத்த தானம் செய்துள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி தலைமை வகித்தாா். மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா. சித்ரா, காவல் துணைக் கண்காணிப்பாளா் காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வட்டங்களில் 48 சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்த முகாம்கள் மூலம் 1,563 போ், அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் 1,809 போ் என மொத்தம் 3,372 பேரிடம் ரத்தம் பெறப்பட்டுள்ளது. தானமாக பெறப்பட்ட ரத்தம், பிரசவ வாா்டில் உள்ள 1,549 பெண்களுக்கும், இதர மருத்துவ வாா்டுகளில் உள்ள 1,430 நோயாளிகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது

நோய்த் தொற்று பரவல் அதிகரித்த நெருக்கடியான கால கட்டத்திலும் ரத்தம் வழங்கிய கொடையாளா்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சாந்தா அருள்மொழி பரிசு, கேடயங்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.