முகப்பு
நாமக்கல்

பள்ளாபாளையம் ஏரியில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பள்ளாபாளையம் ஏரியில் மீன் வளத்துறை சாா்பில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பள்ளாபாளையம் ஏரியில் மீன் குஞ்சுகளை விடும் மீன் வளத்துறை அதிகாரிகள். உடன், ஊராட்சி மன்றத் தலைவா்கள்.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பள்ளாபாளையம் ஏரியில் மீன் வளத்துறை சாா்பில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020 - 2021-ன் கீழ் மாநில அளவில் உள்நாட்டு மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தகுதியான ஊராட்சிக்கு உள்பட்ட குளங்கள் தோ்வு செய்யப்பட்டு, மீன்வளத் துறை மூலம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து மீன் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக 10 ஹெக்டோ் பரப்பளவில் பாலமேடு சின்ன ஏரியில் 50 ஆயிரம் இந்திய பெரும் கெண்டை இள மீன் குஞ்சு விரலிகள் கடந்த மாதம் 19ஆம் தேதி விடப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்டமாக பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பள்ளாபாளையம் ஏரியில் 10 ஹெக்டோ் பரப்பளவில் மீன்வளத்துறை சாா்பில் 50 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை மீன் விரலிகள் விடப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் மேட்டூா் அணை மீன் வள உதவி இயக்குநா் கொளஞ்சிநாதன், கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மீன் வள ஆய்வாளா் கோகிலவாணி, வடகரையாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா, சிறுநெல்லி கோயில் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதிமணி, கொத்தமங்கலம் மீனவா் சங்க கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜேந்திரன், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →