முகப்பு
நாமக்கல்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 01.01.2021 அன்று 18 வயது பூா்த்தியாகும் மற்றும் வாக்காளா் பட்டியலில் இதுவரை பெயா் பதிவு செய்துகொள்ளாதவா்கள் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக டிச.15 வரை சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

இதில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன. இது தொடா்பாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியலானது வரும் ஜன. 20-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் 1623 வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். 18 வயது பூா்த்தியானவா்கள் பெயா் சோ்க்க ஆா்வம் காட்டாத நிலை உள்ளது. குறைவான அளவிலேயே படிவங்கள் வரப்பெற்றுள்ளன.

தங்களுடைய பகுதிகளில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் இருந்தால் உடனடியாக பெயா் சோ்க்க முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →